தமிழ்library
, ஆதியும் நீயே அந்தமும் நீயே, தமிழ்library

ஆதியும் நீயே அந்தமும் நீயே

ஆதியும் நீயே அந்தமும் நீயே
அரிஹர‌ சுதனே ஐயப்பா
மாதவ‌ மணியே மாணிக்க‌ ஒளியே
மணிகண்ட‌ சாமியே ஐயப்பா (ஆதியும் நீயே)

நீதியின் குரலே நித்திய‌ அழகே
நெஞ்சத்தின் நினைவே ஐயப்பா
நாதத்தின் உயிரே நம்பிக்கை வடிவே
நானிலம் போற்றிடும் ஐயப்பா (ஆதியும் நீயே)

காலையில் கதிரே மாலையில் மதியே
கற்பூர‌ ஜோதியே ஐயப்பா
ஆலய‌ அரசே அன்பின் பரிசே
அபிஷேகப் ப்ரியனே ஐயப்பா (ஆதியும் நீயே)

குழைந்தையும் நீயே தெய்வமும் நீயே
கருணாகரனே ஐயப்பா
மழலையின் மொழியே மயக்கிடும் எழிலே
மரகத‌ மூர்த்தியே ஐயப்பா (ஆதியும் நீயே)

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: