தமிழ்library
, எப்பொழுதும் ஒரே நிலையில் இரு, தமிழ்library

எப்பொழுதும் ஒரே நிலையில் இரு

காஞ்சி மஹா பெரியவாளை தரிசிக்க ஒரு சமயம் அமெரிக்க வாழ் தம்பதிகளும்,அவர்களின் குடும்ப நண்பரும் வந்திருந்தனர்.

அந்த அமெரிக்க தம்பதிகள் 30 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து அங்கு குடியேறியவர்கள்,அவர்கள் குடும்ப நண்பர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழர்.

காஞ்சி மாமுனிவர் அவர்களின் ஷேம லாபங்களை விசாரித்த பின் அவரின் பேச்சு மொழி பக்கம் திரும்பியது.

அந்த அமெரிக்க தம்பதிகளை பார்த்து,நீங்கள் உங்களுக்குள் எந்த மொழியில் உரையாடுவீர்கள் என்று கேட்டார். நாங்கள் வெகு காலமாக அமெர்க்காவில் இருப்பதால்,ஆங்கிலத்தில் தான் பேசுவோம் என்றனர் .

மஹா பெரியவர் குறுக்கிட்டு, நீங்கள் உங்கள் மனதில் எதாவது ஒன்றை பற்றி நினைதால் எந்த மொழியில் நினைப்பீர்கள் என்றார். அதற்கு அந்த தம்பதிகள் ஆங்கிலத்தில் தான் நினைபோம் என்றனர்.

தம்பதிகளுடன் வந்த அவர்கள் குடும்ப நண்பர், எங்களுக்கு தமிழில் பேச வேண்டிய அவசியமே ஏற்படுவதில்லை, அதனால் என்ன பிரயோஜனம் என்று கூறி முடித்தார்.

நாம் தாய் மொழி அல்லாத மொழியில் புலமை பெற்றவர்களாக இருந்தாலும்,நாம் மற்ற மொழியில் பேசும் பொழுது,முதலில் தாய்மொழியில் தான் நம் மனதில் அந்த விஷயம் புலப்படும் ,நம் மனது தான் வேகமாக மற்ற மொழி சொற்களை தேர்ந்தெடுத்து பேச வைக்கிறது என்ற அறிவியல் உண்மையை நன்கு உணர்ந்த காஞ்சி மாமுனிவர் அவர்களின் ஆணவத்தை அடக்க எண்ணினார்.

தம்பதிகளுடன் வந்த குடும்ப நண்பர்,ஆங்கிலம் தெரியாதவர்களுடன் பேசுவதே நேரத்தை வீண் அடிப்பது என்ற எண்ணத்தை கொண்டவர். காஞ்சி மாமுநிவரையும் அதே கண்ணோட்டத்தோடு தான் பார்த்தார்.

இந்த உரையாடல் நடந்து கொண்டி்ருக்கும் ஒரு பெண்மணி பெரியவாளிடம் தீர்த்தம் பெறுவதற்கு வந்தார். காஞ்சி மாமுனிவர் அந்த பெண்மணிக்கு தீர்த்தம் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.

இந்த காட்சியை அனைவரும் பார்த்து கொண்டு இருந்தனர்.

பெரியவாள் அந்த பெண்மணியை பற்றி கூற ஆரம்பித்தார். “தீர்த்தம் வாங்கிண்டு போனாளே அவா குடும்பம் ஒரு காலத்தில் ஓஹோன்னு இருந்தது இன்னைக்கு நொடிஞ்சு போய்டா, ஆனா அன்னைக்கு எப்படி மடத்தின் மேலயும் ஆச்சாரியர்கள் மேலயும் பக்தியா இருந்தாளோ இன்னைக்கும் அப்படி தான் இருக்கா எந்த நிலைமையிலும் ஒரே மாதிரி இருப்பதை ஆங்கிலத்தில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும்” என்று தம்பதிகளுடன் வந்த குடும்ப நண்பரை பார்த்து கேட்டார்.

இது என்ன பிரமாதம் என்று நினைத்த அந்த அமெரிக்க வாழ் தமிழர்,சொல்வதற்கு முனைதார் ஆனால் சரியான வார்த்தை கிடைக்க வில்லை. பெரியவாள் அவரை பார்த்து நான் தமிழில் சொன்ன விஷத்தை நீங்கள் ஆங்கிலத்தில் நினைத்து பார்த்து சொல்லுங்கள் என்றும் கேட்டு கொண்டார். அப்பொழுதும் அவருக்கு அந்த வார்த்தை கிடைக்க வில்லை.

அமெரிக்க தம்பதிகளிடமும் கேட்டார், அவர்களாலும் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. பெரியவாள் அந்த அமெரிக்க குடும்ப நண்பரை பார்த்து ” உங்களுக்கு வேணா அவகாசம் தரேன் வெளிய போய் யோசிச்சு சொல்லுங்கோ ” என்றார்.

அவர் குறுகும் நெடுக்கும் நடந்து அதற்கு விடை தேடினர் ஆனால் அவருக்கு கிடைக்க வில்லை.

பெரியவாள் அந்த அமெரிக்க தமிழரை பார்த்து “நான் உங்க அளவுக்கு ஆங்கிலம் தெரியாதவன் தான், ஆனால் நான் ஒரு வார்த்தை சொல்லறேன் அது சரியாய் இருக்கானு பாத்து சொல்லுங்கோ” என்றார் பெரியவாள். Equipoised (எப்பொழுதும் ஒரே நிலையில் இருத்தல்) என்ற ஆங்கில வார்த்தையை சொன்ன பொழுது தான் அவர்கள் அனைவர்க்கும் பொறி தட்டியது, அது தான் சரியான வார்த்தை என்று அவர்கள் ஒப்பு கொண்டனர்.

தம்பதிகளுடன் வந்த குடும்ப நண்பர் கண்ணீர் மல்க தான் ஆணவமாக இருந்ததையும் அதற்கு மன்னித்தருளும் படியும் பெரியவாளின் காலில் விழுந்து ஆசி பெற்று சென்றனர்.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: