ஓம் என்பதன் அறிய விளக்கம்
ஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து வரும் சப்தமாகும் பூமி சுத்தும் போது எழும்பும் ஒலி அலைகள் ஆகும். இது தான் பிரபஞ்சத்தையே இயக்குகிறது. மும்மூர்த்திகளை படைத்த பராசக்தி ஓம் காரத்தில் இருந்து தோன்றினால் என்று வரலாறு கூறுகிறது.மேலும் பிரம்மா ஒம் காரத்தை வைத்து தான் உலக ஜீவன்களை படைக்கிறார் .
ஓம் என்பதற்க்கு பிரணவம் என்று பொருள், பிரணவம் என்றால் முடிவில்லாதது என்று கூறுவார்கள்.
இந்த ஓம் என்பதை வைத்து தான் மந்திரம் தொடங்கப்படுகிறது ஏனென்றால் இதுதான் பிரபஞ்ச த்தின் சாவி இதை உச்சரித்து கூறும்போது அந்த சொல் வலிமை அடைகிறது.
ஓம் என்பதை பிரித்தால் அ காரம் உ காரம் ம காரம்
அ காரம் என்பது சிவம் எண் : 8 இடம் : வலதுகண் சூரியன்
உ காரம் என்பது சக்தி (பார்வதி) எண் : 2 இடம் : இடதுகண் சந்திரன்
ம் காரம் என்பது இரண்டும் சேர்ந்தது எண் : 0 இடம் : புருவமத்தி சுலுமுனை
ஏதாவது வேலை தாய் கொடுத்தால் மகன் மறுத்தால் ரெண்டு எட்டு வைத்தால் முடுந்துவிடும் என்பார்கள். அதாவது ரெண்டும் எட்டும் வைத்து(ஓம் என்ற சொல்லை வைத்தோ, ஓம் என்பதை புருவ மத்தியில் தியானித்து) தொடங்கினால் வேலை முடிந்தது. இதையே தான் சுலுமுனை சித்தரும் கூறினார்.இதன் கூறும் முறையை முந்தைய பதிவில் கண்டிருப்பீர்.
ஓம் என்பது பிரணவம் இதற்கு அப்புறம் தான் தெய்வத்தின் பெயர் தோன்றும்.
ஓம் சரவணபவ
ஓம் கம் கணபதியே நம
ஓம் சக்தி ஓம்
ஓம் சிவசிவ ஓம்
ஓம் நமோ நாராயணா
ஓம் என்ற பிரணவத்தை அடுத்து பிரணவ பெயர் வரக்கூடாது இது கட்டாயம்.
ஓம் என்பதற்கு இணையான தெய்வ பெயரும் உள்ளது அதற்கு முன் ஓம் என்று போடக்கூடாது
நமசிவய
நமசிவய என்பது பஞ்சாட்சரம் இது 51 அட்சரங்களை கொண்டது அதனால் இதை தனியாகத்தான் கூறவேண்டும்.
ஓம் நமச்சிவாய என்பது ஒலி வேறு இதன் முன் ஓம் போடலாம். இது நமசிவய க்கு நிகரானது தான் ஆனால் இங்கு வ க்கு வா வருவது,ச் வருவது சுட்டிகாட்டவேண்டியது
ராம்
இது ராமபிராணுடைய பெயர் இது பிரணவத்திற்கு இணையானது அதனால் தான் ஓம் ராமா என்று கூறமறுக்கிறார்கள்.வைணவத்தில் இது பற்றி குறிப்பு உள்ளது
உமா
இதுவும் பிரணவத்திற்கு இணையானது உமா வை பிரித்தால் உ + ம் + அ என்பதாம்.இங்கு ஓம் என்பது பின்நோக்கியுள்ளது
அதனால் தான் உமாமகேஷ்வரா என்பார்கள்.
முஸ்லீம் மதத்தினர் அல்லஉ அக்பர் என்பார்கள்
அ ல்லா உ என்பது பிரணவம் அதாவது அ உ
கிறிஸ்துவர்கள் ஆமென் என்பார்கள் அதை எப்பொழுதும் கூறுவார்கள்.தொடக்கத்திலும் சரி பிரசங்க முடிவிலும் சரி
ஆமென் என்பது முன்பு ஆங்கிலத்தில் om en என்றது இதை சேர்த்தால் சாத்தானுக்குரிய (omen)சொல்லாக மாறியது, அதனால் OAMen என்றார்கள். இதில் ஓம் என்பது மறைந்துள்ளதை கண்டிர்கள். அதாவது O+A = AU ( Aum) இதை அப்போதே அவர்கள் கண்டதால் Amen என்ற எழுத்து வடிவம் கொடுத்தார்கள். ஆனால் சொல் ஓம் க்கு தான் சொந்தம்.
O சாத்தானுக்கு
A கடவுளுக்கு என வகுத்ததாக தெரிகிறது.
இந்த பதிவு ஓம் என்பது பல இடங்களில் மறைந்துள்ளது என்பதை காட்டவே தவிர, தவறு இருப்பின் மன்னிக்கவேண்டுகிறேன்.
Add comment