ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு ரிஷப்ஷன் வச்சுது…….
எல்லா விலங்குகளும் விருந்து சாப்டுட்டு , புலி ஜோடியை நாலு அடி தள்ளி நின்னே வாழ்த்திட்டு போச்சு.
மாப்ள புலிக்கோ கர்வம் தாங்கல.
திடீர்னு ஒரு பூனை மட்டும் சரசரன்னு புலிக்கிட்ட போய்ட்டு கைக்கொடுத்து வாழ்த்து சொல்லிடுச்சு.
புலிக்கு ஆத்திரம் வந்துடுச்சு. பூனையப் பார்த்து கர்ஜனையோட,
“டேய் இத்தனைப் பேரு என்னய தூரம நின்னு வாழ்த்திட்டு போறானுங்க…..
ஒனக்கு மட்டும் எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட வந்து வாழ்த்து சொல்லுவ ! நான் புலிடா” ன்னு சொன்னுச்சு.
அந்த பூனையோ கெக்க பிக்கன்னு சிரிச்சுட்டே “அடேய் கிறுக்கு பயலே !
நானும் கல்யாணத்துக்கு முன்ன “புலிதாண்டா ” ன்னு சொல்லிட்டு ஓடிப் போச்சு !
Add comment