கிரஹணதன்று சொல்ல வேண்டிய சுலோகம், தமிழ்library
கிரஹணதன்று சொல்ல வேண்டிய சுலோகம், தமிழ்library

கிரஹணதன்று சொல்ல வேண்டிய சுலோகம்

பாதுகா சஹஹஸ்ரம்

கநகருசிரா காவ்யாக்யாதா சனைஸ் சரணோசிதா
ஸ்ரிதகுருபுதா பாஸ்வத்ரூபா த்விஜாதி பசேவிதா
விஹித விபவா நித்யம் விஷ்ணோ பதே மணி பாதுகே
த்வமஸி மஹதீ விஸ்வேஷாம் ந ஸூபா க்ரஹமண்டலி –749–

பொருள்

ஸ்ரீ மணி பாதுகையே அழகிய பொன்னிறம் -ஸ்ரீ ராமாயாணாதி காவிங்களில் புகழப் பெற்று உள்ளாய்-
மெதுவாக சஞ்சரிக்கிறாய் -ஆசார்யர்கள் வித்வான்கள் ஆஸ்ரயிக்கின்றனர்-
உன் ஒளி சூர்யனை நிகர்க்கும் -அந்தணப் பெரியோர் ஆராதிகின்றனர் -எப்போதும் பகவான் திருவடியில் நின்று விளங்குகிறாய் –
பொன் போன்ற சிவந்த அங்காரகன் ஆகிற செவ்வாய் -காவ்யன் எனப்படும் சுக்ரன் -சனைஸ்சரன் என்கிற சனி -குரு மற்றும் புதன்
சூர்யன் சந்தரன் இவர்கள் எல்லாம் சஞ்சரிப்பது விஷ்ணு பதம் என்கிற ஆகாச மண்டலத்தில் -இவர்கள் சிலர் சில பொழுது அசுபராய் இருக்க நேரும்
நீ ஒரு சுபமான கிரஹங்களின் தொகுப்பாக விளங்குகிறாய் -நீ எப்போதுமே சுபமே தான் விளைவிப்பாய்

கிரஹணதன்று சொல்ல வேண்டிய சுலோகம், தமிழ்library

tamilibrary

Contact Us