பொற் கோவிலூர் என்ற கிராமத்தில் வசிக்கும் மாதவன் சிலைகள் வடித்து தனது வாழ் நாளை கழித்து வந்தான். அவன் எப்போதும் எரிச்சலான முகத்துடனும் கோவமான சுபாவத்தையும் கொண்டிருந்தான். அவன் அவ்வூருக்கு வெகு நாட்களாக செதுக்கிய சிலை தயாராகும் தருவாயில் இருக்கும் போது ஊர் பெரியவர்கள் அனைவரும் மாதவனை சந்தித்து வருகிற வெள்ளிகிழமை நாள் நன்றாக உள்ளது அன்றே இந்த சிலையை பிரதிஷ்டை செய்திடலாம் என்றனர்.அவனும் சரி என்று விறுவிறுப்பாக வேலையை முடித்தான் . சாமியின் கண்களை திறக்கும் பணி முடியும் போது சிறு துளி கல் அவனது கண்களில் பட்டு பார்வை இழந்துவிட்டான். மறு நாள் வெள்ளிக் கிழமை அவன் செய்த சிலைக்கு கும்பாவிசேகமும் ஆட்டமும் பாட்டமும் ஜோராகா நடந்தது இவற்றையெல்லாம் அந்த சிற்பியால் கண்டு களிக்க முடியவில்லை மனம் உடைந்து கோயில் சன்னதிக்கு சென்று தாயே கல்லாக இருந்த உன்னை கடவுளாக வடித்தேன் இன்று ஊரே கைகள் கூப்பி உன்னை வணங்குகிறது கடவுளாக பாவிக்கும் என்னை ஒரு கல்லாக தூக்கி எரிந்து விட்டார்களே இந்த கல் நெஞ்சு கார மக்கள் இது என்ன கொடுமை இதற்கு நீயே என்னை கொன்று விடலாமே என்று அழுது புலம்பினான் மாதவன்
இதைக் கேட்ட தெய்வம் குழந்தை உருவில் வந்து ஐய்யா தங்களின் கூற்று தவறு.கல் கடவுளாகலாம் கல் நெஞ்சம் படைத்த நீங்கள் கடவுளாக முடியுமா ? என்றதும் குழந்தை மறைந்தது
குழந்தையே நீ யார் எனது தவறை சுட்டிக்காட்டி நடந்த தவறை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி சொல்லியவாறு நினைத்துப் பார்த்தான் மாதவன் அன்றொரு நாள் ஒரு குருடனை அலச்சியம் செய்தேன் இன்று நான் குருடனாக வாழ்கிறேன் ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தவறு செய்து விட்டேன் என்னை மன்னித்து விடு இறைவா இனிமேல் உனக்கு கண்ணுக்கு கண்ணாக நானே இருப்பேன் என்றதும் விடிந்தது அய்யோ காண்பது கனவா
தாயே என் தவறை உணர்த்தவா கனவில் வந்தாய் என்று தன் தவறை உணர்ந்து அந்த சிலைக்கு கிடைத்தப் பணத்தை கண்ணில்லாத மக்களுக்கு தானமாக தருகிறேன் என்று வாக்கு கொடுத்தான்.
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பதற்கு இக்கதை ஒரு உதாரணம்
நாம் இந்த உலகில் விற்கவோ வாங்கவோ மட்டும் வரவில்லை ஒருவர் இன்னொருவருடன் தோழமையுடன் இருக்கவே வந்திருக்கிறோம் என்று உணருங்கள் .
Add comment