தமிழ்library
, சிவனிடம் இருந்து நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டியவை!, தமிழ்library

சிவனிடம் இருந்து நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டியவை!

சிவபெருமான் தீயவைகளை அழிப்பவர். எளிமையானவர்கள். கையில் உடுக்கையும் நீண்ட ஜடாமுடியும் புலித்தோலை ஆடையாக அணிந்து கொண்டும் காட்சி தருபவர். சிவபெருமானின் சக்தி அளப்பறியது. அடி முடி அறிய முடியாத அண்ணாமலையாக நெருப்பு ஜ்வாலையாக காட்சி தருபவர். சிவனின் தாண்டவத்தை காண கண் கோடி வேண்டும். சிவன் அணிந்துள்ள அணிகலன்களின் இருந்து நாம் பல விசயங்களை கற்றுக்கொள்ளலாம். சிவராத்திரி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் சிவன் உணர்த்தும் உண்மைகளை அறிந்து கொள்வோம்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்களில் சைவ சமய கடவுளான சிவனை வணங்குபவர்கள் நாட்டில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். சிவ ஆலயம் செல்வது பலரின் மனதிற்கு அமைதியை தரும். சிவனின் திருமேனியில் சந்தனக்காப்பு சாத்தி வணங்கினால் அந்த குளுமை உலகில் உள்ள எல்லா உயிர்களையும் குளிர்விப்பது போல் ஆகும்.முடி முதல் அடி வரை சிவனைப் பற்றி உணர்ந்து கொள்ள ஆயிரம் உள்ளது.

சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் சில உள்ளன. சிவன் வலிமையானவர் மட்டுமல்ல எளிமையானவரும் கூட. எளிமையாக இருப்பவர்கள் வாழ்க்கையில் உயர்வான நிலையை அடைவார்கள் என்பதை சிவனிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.

ஜடாமுடி

சிவபெருமானின் ஜடாமுடியின் மூலம், ஒருமுகமாக இருக்கும் உடல், மனம் மற்றும் ஆத்மா உங்களது உடல்நிலையையும், மனநிலையும் அதிகரிக்க செய்யும் மற்றும் உங்களை அமைதியான நிலையில் ஆட்கொள்ள உதவும். உங்கள் செயல்களில் ஒருமுகத்தோடு செயல்பட பயன் தரும்.

கங்கை

சிவபெருமானின் தலையில் இருக்கும் கங்கை நமக்கு உணர்த்துவது, உங்களது அறியாமையின் முடிவில் ஒரு தேடல் பிறக்கிறது. அந்த தேடலில் இருந்து தான் உங்களுக்கான புதிய வழி தென்படுகிறது என்பதே ஆகும்.

நெற்றிக்கண்

சிவபெருமானின் நெற்றிக்கண் நமக்கு கூறுவது என்னவெனில், நமக்கு பின்னால் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டு அதை தகர்த்தெறிந்து, முடியாது என்பனவற்றையும் முடித்துக் காட்ட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. நெற்றிக்கண்ணில் உள்ள அக்னியில் இருந்து உதித்தவர் ஆறுமுகக்கடவுள்.

நீலகண்டம்

சிவபெருமானின் நீல நிற தொண்டையின் மூலம் நாம் அறியவேண்டியது, நமக்கு எவ்வளவு கோபம் வந்தாலும், அதை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அதை மற்றவர் மீது திணித்து உங்கள் நிலையை நீங்களே குறைத்துக் கொள்ள கூடாது என்பதே ஆகும்.

நாகம்

சிவபெருமானின் கழுத்தை சுற்றி இருக்கும் நாகம் மூலமாக நாம் உணர வேண்டியது, நம்முள் இருக்கும் ‘நான்’ எனும் அகங்காரத்தை விட்டுவிட்டால், உங்கள் மனநிலையும் மற்றும் உடல்நிலையும் மேலோங்கும் என்பதே ஆகும்.

திரிசூலம்

சிவனின் கையில் உள்ள திரிசூலம் மூலமாக நாம் அறிய வேண்டியது, நமது மனது, அறிவாற்றல், தன்முனைப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தினோம் எனில் நமது வேலைகளில் சிறந்து செயல்பட இயலும் மற்றும் தோல்விகளைத் தகர்த்தெறியலாம் என்பனவாகும்.

உடுக்கை

சிவபெருமானின் உடுக்கையின் மூலமாக, உங்கள் உடலின் அனைத்து எண்ணங்களையும் ஒருமுகமாக செயல்படுத்தும் போது, உங்கள் உடல் சுத்தமாகி, நோயின்றி வாழ உதவுகிறது என்பதே ஆகும்.

கமண்டலம்

சிவபெருமானின் கமண்டலம் மூலம் நாம் அறிய வேண்டியது, நமது உடலில் இருந்து தீய எண்ணங்களையும், எதிர்மறை எண்ணங்களையும் தவிர்த்தோம் என்றால் நாம் நல்ல நிலையை எட்ட முடியும் என்பதே ஆகும்.

திருநீறு

சிவபெருமானின் நெற்றியிலும் தேகத்தில் இருக்கும் திருநீரு நமக்கு உணர்த்துவது, நம் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் அல்ல, அனைத்தும் கடந்து போகும். அதனால் எதற்காகவும் மனக்கவலைப்படாமல், துயரம் கொள்ளாமல் உங்கள் தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து வாருங்கள் என்பதே ஆகும்.

ஆழ்ந்தநிலை

சிவபெருமானின் ஆழ்நிலை உருவின் மூலமாக, நாம் அமைதி மற்றும் பொறுமையைக் கையாளும் போது, நமது தினசரி பிரச்சனைகளையும், கவலைகளையும் எளிதாக கடந்து தெளிவான மனநிலை பெறலாம் என்பதே ஆகும்.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: