தமிழ்library
, செவ்வாய் தோஷம் பிரச்சனையா ?, தமிழ்library

செவ்வாய் தோஷம் பிரச்சனையா ?

உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சகோதர உறவுகளுடன் ஒற்றுமை குறையும். அவர்களின் ஆரோக்யம் அடிக்கடி சீர்கெடும். பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு சம்பந்தப்பட்ட வழக்குகள் இழுபறியாகும். சிற்றின்ப நாட்டம் அதிகரிக்கும். கடன்கள் அடையாமல் அதிகரித்துக் கொண்டே போகும். ரத்த அழுத்த மாறுபாடு, ரத்தத்தொற்று நோய்கள், அடிக்கடி காயம் ஏற்படுதல், கழிவுப்பாதை உபாதைகள், தலைசுற்றல், பெண்களுக்கு மாதாந்திர உபாதைகளில் சிரமம் இப்படிப்பட்ட உடல்நலப் பிரச்சனைகளுள் ஏதாவது ஒன்று மாறி மாறி கஷ்டப்படுத்தக்கூடும்.

செவ்வாய் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? செவ்வாய்க்கிழமைகளில் சூரியோதயத்தில் 6.15 முதல் 6.45க்குள் 5 அகல் தீபத்தினை பசு நெய்விட்டு உங்கள் விட்டு பூஜையறையில் ஏற்றி வையுங்கள். செம்பு உலோகத்தாலான டாலர் அல்லது காப்பை அணிந்து கொள்வது நல்லது. முருகன் (அ) துர்கை டாலரானால் கூடுதல் சிறப்பு. அடிக்கடி அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை வழிபட்டும், அங்குள்ள நவகிரக சன்னதி செவ்வாயையும் வழிபட்டு வாருங்கள். முடிந்தால் பழநிக்குச் சென்று அங்குள்ள முறைப்படி முருகப்பெருமானை தரிசனம் செய்யுங்கள்.

வைத்தீஸ்வரன் கோயில் சென்று அங்குள்ள அங்காரகனுக்கு அர்ச்சனை செய்வதும் நல்ல பலன் தரும். ரெட்கார்னெட் டாலர் அணிவதும், ரெட்கார்னெட் கணபதியை பூஜிப்பதும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்யலாம். வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கிக் கொடுங்கள். அடிக்கடி நவகிரக செவ்வாய்க்கு அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் பிறந்ததேதி அல்லது கிழமையில் செய்வது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.

செவ்வாய் துதி
சிறுப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு
வசனம்நல் தைரியத்தோடு மன்னதம் சபையில் வார்த்தை
புசபல பராக்கிரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீள் நிலம்தனில் அளிக்கும்
குசன்நில மகனாம் செவ்வாய் குறைகழல் போற்றி போற்றி.
செவ்விய நிறத்து செவ்வாய் போற்றி
திவ்விய சுகமதை தருவாய் போற்றி
கவ்விய வினைகளைக் களைவாய் போற்றி
அவ்வியம் அகன்றிட அருள்வாய் போற்றி.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: