தமிழ்library
, பரங்கிப்பழமும் ஆலம் பழமும், தமிழ்library

பரங்கிப்பழமும் ஆலம் பழமும்

காடு வழியே பயணம் மேற்கொண்டிருந்த சீனுவுக்கு நெடுந்தூரம் பயணித்த களைப்பில்ஓய்வு தேவைப்பட்டது. உடனே ஒரு பரந்த விரிந்த ஆலமரத்தின் கீழ் துண்டை விரித்துப்போட்டு படுத்தான்.அந்த மரத்துக்கு பக்கத்திலேயே ஒரு பரங்கி செடி படர்ந்து விரிந்துபசுமையாக காட்சியளித்தது. மிகப்பெரிய பரங்கி பழம் ஒன்றும் அதில் காய்த்து தரையைத்தொட்டபடி கிடந்தது. சீனுவுக்கு மனதுக்குள் ஒரு பிளாஷ் அடிக்க “இவ்ளோ பெரிய ஆலமரம் வளர்ந்து கிடக்கு. ஆனா இதோட பழம் எவ்ளோ சின்னது. தக்கணூண்டு பரங்கிசெடியில் எவ்ளோ பெரிய பழம் பழுத்து கிடக்கு.. இன்னா கடவுளோட வஞ்சம் பாருயா….பெரிய மரம்னா சின்ன பழம். சின்ன செடின்னா பெரிய பழம்…” என்று யோசித்த படியேதூங்கிப் போனான். சற்று நேரத்தில் வீசிய காற்றில் ஆல மரத்திலிருந்து உதிர்ந்த ஒரு சின்னபழம் சீனுவின் மீது “சொத்’தென்று விழுந்தது. பதறி எழுந்த சீனுவுக்கு திடீரென தன் அறியாமை பற்றி ஞானம் வந்தது. ” அடடா கடவுளை பழிச்சுட்டேனே…. இந்த சின்ன பழம் விழுந்ததுக்கே முகம் வலித்ததே இவ்ளோ பெரிய பரங்கிப் பழம் விழுந்தா செத்தேப் போயிருப்பேனே…கடவுளே மன்னிச்சுக்கப்பா….” என்றபடியே கடவுளுக்கு நன்றி சொல்லி பயணத்தை தொடர்ந்தான்

நீதி 1 : கடவுள் படைப்பில் எதுவுமே குறையில்லை. காரணமின்றி எதையும் கடவுள்படைப்பதில்லை

நீதி 2 : புலியை படைத்ததற்காக கடவுளை திட்டாதே. அதற்கு இறக்கை கொடுக்க வில்லையேஎன சந்தோசப்படு.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: