தமிழ்library
, *மூச்சுப் பயிற்சியின் ரகசியம்*, தமிழ்library

*மூச்சுப் பயிற்சியின் ரகசியம்*

*கோரக்கர் சந்திரரேகை* என்ற நூலில் கோரக்கர் சித்தர் ,  மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது வடக்குப் பக்கம் பார்த்தவாறு கைகால்களை ஆட்டாமல் அசைக்காமல் நிமிர்ந்த வாக்கில் அமர்ந்து கொண்டு மூச்சை சூரிய கலையிலும், சந்திர கலையிலும் மாற்றி மாற்றி இழுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் கைகால்களை ஆட்டாமல் கை வைக்காமல் மூச்சுப் பயிற்சி எப்படி செய்வது , அவ்வாறு செய்யும் முறை உண்டா?

*” காற்றே கடவுள் “*
**********************

அனைவரும் மறைத்து வைத்த சூட்சுமத்தை திறக்கின்றோம். இந்த சரீரத்துள்ளே எண்ணற்ற ரகசியங்களை இறைவன் புதைத்து வைத்துள்ளான். அது எவ்வாறு என்று வெளிப்படையாக கூறுகின்றோம்.

ஒரு நாழிகைக்கு *360* சுவாசம் , ஒரு நாளைக்கு *21,600* சுவாசம். மூச்சுப் பயிற்சியில் *” பூரகம் “* என்பது மூச்சை உள்ளே இழுப்பது, *” கும்பகம் “* என்பது உள்வாங்கிய மூச்சை (காற்று) உள்ளே நிறுத்துவது, *” ரேசகம்* ” என்பது மூச்சை வெளியிடுவது. நமக்கு எந்த நாசியில் சுவாசம் ஒடுகின்றதோ அதற்கு *”பூரணம் “*என்று பெயர்.

*” சீதாக்காயம் “*என்று கோரக்கர்  சித்தர் கூறியிருக்கிறார். சீதாக்காயம் என்பது நமது நாசி (மூக்கு ) தான். நாசிக்குமேல் காசி என்று கூறுவார்கள். அது என்னவென்றால் ” சுழிமுனை” என்து ஆகும்.

 நமக்கு இடது நாசி சந்திரகலை. அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும். வலது நாசியில் சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும்.

இரண்டு நாசிகளிலும், *மூச்சுக் காற்று வந்தால் அதற்கு ” சுழிமுனை “* என்று பெயர். பொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரிய கலையில் ஓடும். அதிக வெயில் அடிக்கும் பொழுது சந்திர கலையில் சுவாசம் ஓடும். இது இயற்கையாகவே அமைந்துள்ள அற்புதம் ஆகும். ஏனெனில் உடலில் சூடும், குளிர்ச்சியும், சமநிலையில் இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு குறைபாடு இந்தாலும் நமது உடலல் பல உபாதைகள் ஏற்படும். நம் மூச்சுக் காற்றிலே இறைவன் எவ்வளவு சூட்சுமத்தை வைத்துள்ளான் பார்த்தீர்களா?

*உடலைச் கீங்காரித்தாய் !*
*உயிர்க்கு என்ன செய்தாய் ?*

மேலும் ஒருவருக்கு சூரியகலையில் சுவாசம் மூன்று நாட்கள் ஓடினால் அவருக்கு ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்கும். ஒரே நாசியில் பத்து நாட்கள் தொடர்ந்து ஒடினால் மூன்று மாதத்தில் மரணம் ஏற்படும். சூரிய கலையில் ஓடக்கூடிய காற்று 8 அங்குலம் . சந்திர கலையில் ஓடும்
காற்று 16 அங்குலம்.

மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது 12 அங்குலம் காற்றை உள்ளிழுத்து 8 அங்குலம் நிறுத்தி 4 அங்குலம் வெளிவிட வேண்டும். இதே முறையில் ஒரு வனுக்கு சுவாசம் தொடர்ந்து ஓடினால் அவன் 120 வருடங்கள் வாழ்வான். இவ்வாறு சுவாசம் குறைய ஆயுளும் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும்.

அதனால்தான், சுவாசத்தை அடக்குவதால் ஆமைகள் 300 வருடங்கள், 400 வருடங்கள் வாழ்கின்றன. அதேபோல்தான் பாம்பு 800 வருடம், 1000 வருடம் வாழ்கின்றன.

இதைப் பற்றி உணர்ந்த நாம் பின்பற்றுவதில்லை.

நம்முள் சுவாசம் நடக்கும் அளவு

அமர்ந்திக்கும் போது – 12 அங்குலம்

நடக்கும் போது             – 16 அங்குலம்

ஓடும் போது                  – 25 அங்குலம்

உறங்கும் போது          – 36 அங்குலம்

உடலுறவு கொள்ளும் – 64 அங்குலம் போது

*சுவாசம் குறைத்தால் ஏற்படும் நன்மைகள்*

*11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்*

*10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்*

*9 அங்குலமாக குறைந்தால்  விவேகி ஆவான்*

*8 அங்குலமாக குறைந்தால்  தூர திருஷ்டி காண்பான்*

*7,அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்*

*6,அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்*

*5, அங்குலமாக குறைந்தால் காயசித்து உண்டாகும்*

*4,அங்குலமாக குறைந்தால் அட்டமாசித்து உண்டாகும்*

*3,அங்குலமாக குறைந்தால் நவகண்ட சங்சாரம் உண்டாகும்.*

*2, அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல்*

*1, அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம்*

உதித்த இடத்திலேயே நிலைத்தால் சமாதி நிலை அன்ன பாணம் நீங்கும்

எந்தெந்த நாட்கள் எந்த சுவாசம் ஓட வேண்டும்  என்பதைப் பற்றி காண்போம்

ஞாயிறு, செவ்வாய் , சனி – இம் மூன்று நாட்களிலும் சூரியகலை ஓட வேண்டும்.

வெள்ளி, திங்கள் , புதன் – இம் மூன்று நாட்களிலும் சந்திரகலை ஓட வேண்டும்.

வியாழக்கிழமை -பூர்வபட்சம் (வளர்பிறை) –சந்திர கலை ஓட வேண்டும்.

அமரபட்சம் (தேய்பிறை ) – சூரிய கலை ஓட வேண்டும்.

இம் முறையில், அதிகாலை 4 மணிக்கு சுவாசம் நடக்கு வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நடந்தால் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.
சனிக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சூரிய கலையில் சுவாசம் ஓட வேண்டும்.

– *சித்தர்களின் குரல்

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: