தமிழ்library
வருமுன் காப்போம், தமிழ்library

வருமுன் காப்போம்

தண்ணீர் ஓரளவு உள்ள குளத்தில் தவளைகள் அதிகம் வாழ்ந்தன. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மகிழ்வுடன் இருந்தன.
ஒரு நாள் குளக்கரையில் சத்தம் கேட்டு, தவளைகள் பார்த்தன. குளக்கரையில் இரண்டு காளை மாடுகள் ஒன்றை ஒன்று முட்டி சண்டை போட்டுக் கொண்டு இருந்தன.நேரம் செல்லச் செல்ல அவற்றின் சண்டையும், சூடு பிடித்தது. தவளைகள் ஒன்றுக் கொன்று பந்தயம் கட்ட ஆரம்பித்து விட்டன.

வெள்ளை மாடுதான் சண்டையில் வெற்றி பெறும் என ஒரு குழுவும் இல்லை இல்லை செவளை மாடுதான் வெற்றி பெறும் என ஒரு குழுவும் தவளைகளுக்குள் பந்தயம் கட்டிக் கொண்டு, ஆர்வத்துடன் மெய் மறந்து மாட்டுச் சண்டையைக் கவனித்தன. தவளைகளுக்கிடையில் இரண்டு பெரிய தவளைகள் பேசிக் கொண்டன.

இந்த மாட்டுச் சண்டையில் எது வெற்றி பெற்றால் என்ன தோற்றால் என்ன என பெருமூச்சு விட்டது.
என்னங்கண்ணே நம்ம கூட்டமே கூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாங்க, நீங்க என்னடான்னா இப்படிப் பேசுறீங்களே.
ஆமாப்பா என்கவலை எனக்கு என்று வருத்தத்துடன் கூறியது.

இப்ப என்ன ஆச்சுன்னு இதுக்குப் போயி வருத்தப்படுறீங்க.இந்த மாடுகளின் ஏதாவது ஒன்று வெற்றி பெற்றாலும் தோற்ற மாடு குளத்துக்குள் வெறித்தனமாக அங்கு மிங்கும் ஓடுமே.அதனாலென்ன புரியாமல் கேட்டது.

புரியாமல்தாந் கேட்கின்றாயா? மாடு குளத்துக்குள் ஓடும் போது, நம் தவளைச் சகோதரர்கள் எத்தனை பேர், அதன் காலில் மிதிபட்டு இறந்து விடுவார்கள் என யோசித்தாயா கவலைப்பட்டது.

ஆமாம் அண்ணே நீங்கள் கூறுவதும் உண்மைதான் என அது உணர்ந்து வருந்தியது. இரண்டு தவளைகளும் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியது. அவைகளின் பேச்சில் உண்மை இருப்பதை உணர்ந்த, சில தவளைகள் அவற்றின் பின்னால் சென்றன.

சிறிது நேரத்தில் அவை குளத்தை விட்டு வெறியேறி தப்பிவிட்டன. அவைகளின் பேச்சைக் கேட்காமல், சில தவளைகள் மட்டும் குளத்திலேயே இருந்தன.சிறிது நேரத்தில் வெற்றி பெற்ற மாடு, தோல்வியுற்ற மாட்டினை முட்டித் தள்ளியது. இதனால் அந்த மாடு குளத்துக்குள் இறங்கி அங்கு மிங்கும் ஓடியது.

இப்போழுது அதன் கால்களில் மிதிபட்டு எத்தனையோ தவளைகள் இறந்துவிட்டன. அந்நேரம் தான் குளத்திலிருந்து தப்பிச் சென்றிருக்கலாமே என நினைத்தன.

வரும் முன் காப்பதே அறிவான செயலாகும்.

tamilibrary

Contact Us