தமிழ்library
, ஸ்ரீ மஹா மிருத்யுஞ்சய மந்திரம், தமிழ்library

ஸ்ரீ மஹா மிருத்யுஞ்சய மந்திரம்

மந்த்ரம்
ஓம் த்ரியம்பகம் யஜா மஹே
சுகந்திம் புஸ்டி வர்த்தனம்
ஊர் வாருக மிவ பந்தனான்
ம்ருத்யோர் முட்ஷீய மாம்ருதாத்

பொருள்

ஓம் – (பிரணவ மந்திரம்)
த்ரியம்பகம் – (மூன்று கண்களை உடைய பெருமானே)
யஜா மஹே – (போற்றி வணங்குகிறோம்)
சுகந்திம் – (வாசனைகளை உடைய)
புஷ்டி வர்தனம் –(உண்ண உணவு அளிப்பவரும், மற்றும் நம் வளர்ச்சிக்கு காரணமானவரும்)
உருவாருகமிவ – (காம்பில் இருந்து முதிர்ந்து விழும் விளா பழத்தை போல)
பந்தனான் – (பந்தங்களில் இருந்து விடுவித்தல்)
ம்ரித்யோர் மோக்ஷியே – (மரணத்தில் இருந்து விடுவித்தல்)
மா அம்ருதாத் – (அழியா தன்மையை அடைய)

மூன்று கண்களை உடைய, சுகந்தமான நறுமணத்தை உடைய, நம் எல்லோருக்கும் உணவு அளிப்பவரும், நம்மை வளர்ச்சி அடைய செய்பவருமான சிவ பெருமானை போற்றி வணங்குகிறோம். விளா பழம் எப்படி தன் காம்பில் இருந்து பிரிந்து விழுகிறதோ, அதே போல நம்மை பந்தங்களில் இருந்து விடுவித்து, மரணம் என்னும் பயத்தில் இருந்து விடுவித்து, அழியாத நிலை அதாவது மோக்ஷ நிலை அடைய செய்வாயாக. என்றும் அழியாதவனே ஈஸ்வரா.

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: