‘வாணி அக்காவின்ரை புருஷன் எங்கையோ போக வெளிக்கிடுகிறார். .கெதியாய்ப் போனியளெண்டால், இப்ப வாணி அக்காவைச் சந்திக்கலாம். கெதியாய்ப் போங்கோ தீபண்ணா?”
வாணியின் பக்கத்து வீட்டுப் பரமரின் கடைக்குட்டி அப்பன் என்னும் எட்டு வயதுப் பையன் வியர்த்துக் களைத்து ஓடோடி வந்து என்னுடைய காதுகளுக்குள் கிசுகிசுத்தான். என்னுடைய காதுகளையே என்னால் நம்பமுடியவில்லை. அத்தனை மகிழ்ச்சி வராதா!
சட்டைப் பொக்கற்றில் கையை விட்டுத் துழாவினேன். ஒரு பத்து ரூபா நோட்டை எடுத்து அப்பனின் கையில் மகிழ்ச்சியுடன் திணித்தேன். அவனுக்கு என்னை விட மகிழ்ச்சி. நான் கொடுத்த பத்து ரூபாவுடன் டொபி வாங்க அவன் கடையை நோக்கி ஓடஇநான் வாணியின் வீட்டை நோக்கி விரைந்தேன்.
அங்கே வாணியின் கணவன் இல்லை என்ற தகவல் என்னவோ உண்மைதான். ஆனால் நான் ஆசையுடன் சந்திக்கப்போன வாணியும் அங்கு இல்லை. மெதுவாகப் கூப்பிட்டுப்பார்த்தேன் பதில் இல்லை படிப்படையாகத் தொனியை உயர்த்திச் சத்தமாக கூப்பிட்டும் பலன் இல்லை. இனியும் சத்தமாக கூப்பிட்டால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கேட்டுஇவாணிக்குப் பதிலாக அவர்களையே சந்திக்க வேண்டி வந்து விடும் என்பதை உணர்ந்து கொண்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன்.
‘பரதேசி! எங்கே போட்டுது. நான் இவ்வளவு கஷ்டப்பட்டுச் சந்திக்கலாமாமெண்டு வர செம்மறி ! ஆற்றையோ வீட்டை தூங்கப்போட்டுது” மனத்தில் ஏற்பட்ட எரிச்சலினாலும் ஏமாற்றத்தினாலும் என்னையுமறியாது உதடுகள் முணுமுணுத்தன.
‘சே ! எப்படி எண்டாலும் வாணியை ஒருக்கால் சந்திக்கத்தான் வேணும். எப்பவாவது அருமையாக் கடை தெருவுக்குச் சைக்கிளில வாறவள் தானே! பாப்பம்! சந்திக்கிற இடத்திலை கேட்டு ஒரு முற்றை எடுத்துக்கொண்டு. பிறகு அவள் வரச் சொல்லுற நேரம் அவள் வீட்டைபோவம்” மனதுக்குள் திடசங்கற்பம் பூண்டு கொண்டேன்.
வழிமேல் விழி வைத்து அந்த வேம்படிச்சந்தியில் காத்திருந்தேன். ‘இண்டைக்கு எப்படியும் பொறுமையாய் நிண்டு உவளைக் கேட்டுத்தான் பார்க்கவேணும். இலேசிலை மாட்டன் எண்ணாள். பாப்பம்? “எதிர்பார்த்தது வீண்போகவில்லை. வந்து கொண்டிருக்கிறாள். வேறுயார்! அதே வாணிதான். தன்னந்;தனியாக .நானும் குரலைச் சரி செய்து கொண்டு என்னைச் சுதாகரித்துக் கொண்டு தயார் நிலையில் நிற்கவும் எங்கேயோ இருந்து ஒரு மாலாவும் பின்னால் ஷீலாவும் வாணியுடன் இணைந்து கொள்ள மூன்று சைக்கிள்களிலும் அவர்கள் உல்லாசச் சாவாரி செய்ய, நான் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதைத்தவிர வேறு என்ன செய்யலாம்!
வாணியும் நானும் ஒரு காலத்தில் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். ஏற்கனவே என்னுடன் நெருக்கமான பரிச்சயம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்காவது என்னைத் தெரிந்து வைத்திருக்கின்றாள் என்பது மட்டும் எனக்குத் தெரியும். எங்கள் கிராமத்தில் எனது வீட்டுக்குச் சற்றுத் தொலைவில் இருக்கின்றாள். வெளிநாட்டிலிருந்தும் வந்து நிற்கும் யாரோ ஒருவனைத் திருமணமும் செய்து ஜந்தாறு வருடங்கள் ஆகின்றன. குழந்தை குட்டிகள் இல்லை.
இப்போதெல்லாம் சில நாட்களாக இரவும் பகலும் வாணியைச் சந்திப்பது பற்றிய நினைவிலேயே நாட்கள் நகர்கின்றன. அவளைச் சந்திப்பதற்காக எத்தனை நாட்கள் முயற்சி செய்திருபேன்.
அன்று மொரு நாள் அவளின் கணவன் வெளியில் போய் விட்டான். இது எனக்கு அப்பன் சொல்லவில்லை. நானே நேரடியாகக் கண்டேன். அடுத்த கணம் விழுந்தடித்துக் கொண்டு வாணியின் வீட்டே நோக்கிப் புறப்பட்டேன். ஆனாலும் எச்சரிக்கை உணர்வுகளும் என்னைத் தட்டி எழுப்பத் தவறவில்லை. அக்கம் பக்கத்தவர்கள் பார்த்தால் விஷயம் விபாPதமாகலாம் மிகுந்த கவனத்துடன் தெருப்படலைக்குள்ளால் மெல்லத் தலையை நீட்டிப் பார்த்தேன். எதி;ர்பார்த்த வாணி நிற்பது உண்மை தான்.
ஏதோ ஒரு துணிவுடன் தெருப்படலையைத் தட்டித் திறக்கின்றேன். நான் எதிர்பார்த்தது போல வாணி மட்டும் தான் முற்றம் கூட்டிக் கொண்டு நிற்கின்றாள்.
‘வீட்டுக்காரர்! வீட்டுக்காரர்!”
கூப்பிட்டது நான் தான். சும்மா ஒரு சம்பிரதாயத்துக்காக!
‘ஓம் வாருங்கோ!” இது வாணி. இதுவும் ஒரு சம்பிரதாயம் தான் போலும் சொல்லி விட்டுத் தொடர்ந்து முற்றம் கூட்டிக் கொண்டிருக்கின்றாள் அந்த வாணி.
‘நான் தீபன்! உங்களோடை ஒரே வகுப்பிலை படிச்சனான்.”
வாயெல்லாம் பல்லாக இளிந்தபடி நான்தான் சொல்கிறேன். அவள் எந்தவிதச் சலனமுமின்றித் தொடர்ந்தும் முற்றம் கூட்டிய படியே இருக்கின்றாள். ஈர்க்குகட்டைக் கைவிடவில்லை.
‘அது சரிஇ என்ன விஷயம்!” ஒரு இராணுவ அதிகாரியின் மிடுக்கு அவளின் குரலில் தொனிக்கின்றது. அது எனக்குச் சற்று ஏமாற்றமாயிருந்தது. இதென்னடா இது! கேட்போமா! அல்லது பேசாமல் போய் விடுவோமா என்று மெல்லியதாக மனம் சலனப்படுகின்றது. இருந்தாலும் இத்தனை நாட்களாக நாயாய் அலைந்து விட்டு இந்தக் குரலைக் கேட்டுப் பயந்து போவதற்கு நான் என்ன இளிச்சவாயனா!
‘ஹி…..ஹி….அது….வ..ந்…து! ஹி…ஹி…..ஹி.. .நான் உங்களோடை கதைக்க வேணுமெண்டு எத்தினை நாளாய் |ட்றை| பண்ணினனான். ஏலாமற் போச்சுது”
‘ஏன்? அப்படி என்ன விஷயம்? இது அந்த வாணி தான்.
‘ஹி….ஹி… கேளுங்கோவன். இப்பவும் உங்கடை |அவர்| உங்கையில்லை. வெளியாலை எங்கையோ போட்டார் எண்டு கேள்விப்பட்டுத் தான் வந்தனான். அது மட்டுமில்லை. உவ்விடத்துக்கு ஒருத்தருக்கும் தெரியாமற் தான் வந்தனான்.”
இப்படி நான் சொன்னவுடன் இவ்வளவு நேரமும் அனாயசமாக முற்றம் கூட்டிக் கொண்டிருந்த ஈர்க்குக்கட்டு தன் தொழிலை நிறுத்திக் கொள்கின்றது.
‘இஞ்சார்! சுத்திவளைக்காமல் விஷயத்தைச் சொல்லுங்கோ! என்ன செய்யுறது! என்ரை ஒரு |கிளாஸ்மேற்| எண்டு கொஞ்சம் பொறுமையாயிருக்க நீங்கள் ஏதோ கனக்கக் கதைச்சுக் கொண்டு போறியள்.!” கடுகு தாளிக்கத் தொடங்குகிறாள் வாணி.
‘அப்படி ஒண்டுமில்லை. என்ரை மனிசியும் இப்ப அஞ்சாறு நாளாய் ஆஸ்பத்திரியிலை….. அது தான் எனக்கும் கேட்கிறதுக்கும் வெட்கமாய்க் கிடக்குது”
நான் சொல்லி முடிய முன்பு முற்றம் கூட்டிக் கொண்டிருந்த ஈர்க்குக்கட்டு என் முகத்தை நோக்கி வருகின்றது. ஈர்க்குக்கட்டை உயர்ந்தியபடி ருத்திர தாட்டவமாடுகின்றாள் வாணி. நிலைமை வரம்பு மீறி விட்டது. பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் மாறின கதையென்று எனக்கும் புரிகின்றது.
‘ஜயோ! வாணி! எண்னை வித்தியாசமாய் நினைக்காதேங்கோ! எனரை மனிசிக்குச் சுகமில்லை. உந்த ஊர் எல்லாம் விசாரிச்சுப் பார்த்திட்டன் சந்தையெல்லாம் சுத்திப் பார்த்தாச்சு. ஓரிடமுமில்லை. எனக்கு மனிசியின்ரை ஆசையைத் தட்டிக் கழிக்கேலாமற் கிடக்கு. பத்தியத்துக்கு இரண்டு முருங்கைக்காய்ப் பிஞ்சு வேணும். அது உங்களிட்டை தான் கிடக்குதாம். உங்கடை மனிசனுக்கும் இது ஒண்டும் பிடிக்காதாம். ஊரிலை உள்ளவை அறிஞ்சால் பேந்து அவையும் வந்து உங்களுக்குக் கரைச்சல் குடுப்பினமெண்டு தான் இரகசியமாய் ஒளிச்சு வந்தனான். சந்தையிலை கிலோ முன்னூறுக்கும் முருங்கைக்காய் இல்லை. என்ரை மனிசி வருத்தமாய் படுக்கையிலை கிடந்து ஆசைப்பட்டுக் கேக்குது. நாளைக்கு மனிசிக்கு ஏதேனும் நடந்து விட்டாலும்.. அது தான் எப்படியெண்டாலும் உங்களிட்டை இரண்டு முருங்கைக்காய்ப் பிஞ்சு வாங்கலாமெண்டு வந்தனான்.”
அழாக் குறையாக ஈனக்குரலில் நான் சொன்னது சொல்லி முடிய முன்புஇ வாணி கொக்கைத் தடியுடன் முருங்கை மரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றாள். எனக்கு முருங்கைக்காய் கிடைக்கத்தான் போகின்றது. நல்லவேளை..தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.
யாவும் கற்பனை.
Add comment