”அட இந்த திட்டம்கூட நல்லாத்தான் இருக்கும் போல” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் அனந்து.
”தொலைக்காட்சி, ரேடியோ, பத்திரிகைகள் எங்கும் எதிலும், டிஜிட்டல்மயம் பற்றி விலாவரியாக விவரித்த்தைப் பார்த்தபின்தான் அப்படி ஒரு முடிவுக்கு வந்து சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தும் காத்திருந்தான்.
பழம் நழுவி பாலில் விழுவதுபோல்….. அவனது அலுவலகத்தில் ”மிஸ்டர் அனந்து நீங்க உடனடியா பாம்பே போகணும், நம்ம பிராஞ்ச் ஆபிஸ்ல ஏதோ பிராப்ளமாம், நீங்க அட்டெண்ட் பண்ணி தீர்த்துட்டு வாங்க ” சீக்கிரமா புறப்படுங்கோ” என கட்டளையிட்டார் ஜி.எம்.
தலையைச் சொறிந்தபடி ”ஸார், ”பாம்பே போக டூர் ஆட்வான்ஸ்” வேணுமே என்று கேட்க, ” அட இன்னாப்பா நீ, அதான் எல்லாம் டிஜிட்டல்மயமாகி வருதே, ஒன்னோட ஸ்மார்ட் போனை யூஸ் பண்ணி செலவு செஞ்சிட்டு அப்புறமாக கிளைம் பண்ணிக்க” என்றார். இவன் மனக்கணக்கும், ஜி.எம் யோசனையும் ஒன்றுசேர செயல்படுத்த துவங்கினான்.
முதலில் பிளைட் ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்தான். அதன் மெஸேஜை ஸ்மார்ட் போனில் பத்திரப்படுத்திக் கொண்டான்.
விமானத்தளத்தில், அவன் புக் செய்திருந்த ஏர் சர்விஸில், விவரம் சொல்லி பிளைட்டில் சன்னலோர இருக்கையில் அமர்ந்து இயற்கையின் எழிலான வானத்து மேகங்களை ரசித்தவாறே பறந்தான்.
விமானம் பாம்பே போய் சேர்ந்த்து. அதன் பிறகு, ஒரு டாக்ஸியில் ஏறி, பயனம் செய்து டாக்ஸிக்கும் ஸ்மார்ட் போனிலேயே பணத்தை செலுத்தினான்.
பிராஞ்ச் ஆபிஸ் போய் அங்குள்ள பிரச்சினைகளை கேட்டு தெரிந்து கொண்டான்.. பிரச்சினைகளுக்கான தீர்வை இன்னும் ஒரு மணி நேரத்தில சொல்றேன் என்று அங்குள்ளவர்களிடம் தெரிவித்தான்.
அரைமணி நேரம் கழிந்திருக்கும். அந்த அலுவலகத்தில் உள்ள டாய்லட்டுக்கு போனான். . அங்குதான் வில்லங்கத்திற்கு அஸ்திவாரம் அமைக்கப்பட்டிருந்த்து.
அவனின் சட்டைப் பையிலிருந்த ஸ்மார்ட் போன் நழுவி டாய்லட்டில் விழுந்து விட்டது. அவ்வளவுதான் அவனுக்கு உடம்பு வியர்த்து விட்டது.
ரிட்டர்ன் டிக்கெட்டின் விவரம் ஸ்மார்ட் போனில் மெஸேஜாக உள்ளது அல்லவா? அதைக் காண்பித்தால்தான் ஏர் போர்ட்டில் போர்டிங் பாஸ் தருவார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான்.
பிராஞ்ச் ஆபிஸில் விவரத்தைச் சொன்னான் அரைமணி நேரத்திற்கு முன்னால், இவன் முன் கைக்கட்டி நின்றவர்கள், இப்பொது கைக்கொட்டி கும்மாளமிட்டவாறே, ”இவருடைய பொருளையே…. ஒழுங்கா வைச்சுக்க தெரியல. இந்த லட்சணத்துல, நம்ம ஆபிஸ் பிரச்சினையை பெரிசா தீர்க்க வந்துட்டாரு…”என்று அவன் காதுபடவே கேலி செய்தார்கள்.
அனந்துக்கு அவமானமாய் போய்விட்டது, யோசித்தான்….யோசித்தான். எல்லாம் டிஜிட்டல்மயம் என்கிறார்கள். சரியாக புரிந்து கொள்ளாமல்,, அவசரகுடுக்கையாக உடனே செயல்படுத்தி விட்டோம். அதற்கான பலனை அனுபவித்துதானே ஆகணும்” என்று புலம்பியவாறே…. அங்கு பணிபுரியும் ஒரு பணியாளரிடம் ஸ்மார்ட் போனை வாங்கி….. பாம்பே ஏர்போர்ட்டில் விவரம் சொன்னான்.
அந்த ஏர்லைன் சர்வீஸ் பெண்மணி ”ஸார், டோண்ட் ஒர்ரி, எங்க சர்வீஸ் எப்பவுமே சிறப்பா இருக்கும், இதுபோல பயணிகள் தவற விடுறது சகஜம்தான், ஆதனால, நாங்க ஒங்க டீடெயில்ஸ் எங்க கம்ப்யூட்டர் வைச்சிருக்கோம், வந்து ஒங்க டிக்கெட் நகலை வாங்கிட்டு பிளைட்டுல போகலாம், யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்” என்று அழகான ஆங்கிலத்தில் சொன்னார்.
பாம்பே ஏர்போர்ட் போய் ரிட்டர்ன் டிக்கெட் நகலை வாங்கி கொண்டு, இருக்கையில் அமர்ந்து சாகவாசமானபின்பு , என்னதான் டிஜிட்டல்மயம் இருந்தாலும், ”இந்த பேப்பருக்கு இருக்கிற மரியாதையே தனிதான்” கண்டுபிடிச்ச ”சீனாவுக்கு சபாஷ்” என்று மனதுக்குள்ளேயே பாராட்டிக் கொண்டான்
”பக்கத்து ஸீட்டில் பயணம் செய்தவர் சீனாவைச்சேர்ந்தவராயிற்றே”.
Add comment