தமிழ்library
நட்பு கற்பை போன்றது.

நட்பு கற்பை போன்றது.

ஒரு முறை காடு வழியே சென்ற ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது. அதனிடமிருந்து தப்பித்து அவன் ஒரு மரத்தின் மேல் ஏறினான். உச்சியை அடைந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி. அங்கே ஒரு பெரிய மனித குரங்கு உட்கார்ந்திருந்தது. நடுநடுங்கிய மனிதன் அந்த மனித குரங்கிடம் அடைக்கலம் கேட்டான். அந்த மனித குரங்கு, கவலை படாதே நான் உன்னை ஏதும் செய்ய மாட்டேன். என்னை அண்டி வந்த உனக்கு பாதுகாப்பு தருவேன் என்றது. இரவு பொழுதும் வந்தது…. புலியோ மரத்தின் கீழே பசியோடு இருந்தது. மனிதனும் மனிதகுரங்கும் மாறி மாறி உறங்க முடிவு செய்தனர். மனிதன் தூங்கிய போது குரங்கு காவல் காத்தது குரங்கு தூங்கும் போது மனிதன் காவல் காத்தான். புலி இவர்களை பிரித்தாலன்றி நமக்கு உணவு கிடைக்காது என எண்ணி மனிதனிடம்….வஞ்சகமாக …. 
“இப்போது மனிதகுரங்கு தூங்குகிறது நீ அதை பிடித்து கீழே தள்ளிவிடு…..எனக்கு வேண்டியது பசிக்கு இரை, உன்னை விட்டு விடுகிறேன்” என்றது. மனித மனம் குரங்கை விட மோசமானது. நாம் தப்பிக்கலாம் என்று தன்னலம் கருதி மனிதன் குரங்கை கீழே தள்ளிவிட்டான். கீழே விழும்போது நடந்ததை புரிந்த கொண்டது குரங்கு. ஆனால் புலியோ “எனக்கு மனித மாமிசம் தான் வேண்டும்….உனக்கு மனிதனின் இயல்பை புரிய வைக்கவே இவ்வாறு கூறினேன். இப்போதும் உன்னை விட்டு விடுகிறேன்….நீ மேலே சென்று மனிதனை கீழே தள்ளிவிடு நான் பசியாற மனித மாமிசம் உண்டுவிட்டு போய்விடுகிறேன்” என்றது. அப்படியே செய்வதாக சொல்லிவிட்டு மரத்தின் மேலே ஏறி வந்த குரங்கு மனிதனின் அருகில் வந்தது. மனிதனோ பயத்தால் நடுங்கினான். மனித குரங்கோ “பயப்படாதே மனிதா என்னை நம்பி அடைக்கலம் என்று வந்த உன்னை எப்போதும் காப்பேன். புலியிடமிருந்து தப்பிக்கவே நான் உன்னை கீழே தள்ளுவதற்கு ஒப்புக்கொண்டேன். நீ கவலை இல்லாமல் இருக்கலாம்….” என்றது. 

நண்பன் என்று வந்தவனிடம் 
நட்பு பாராட்டவேண்டும். 
நட்பு கற்பை போன்றது. 
ஒருமுறை நட்பின் புனிதத்தில் குறை கண்டோமே ஆயின் அந்த நட்பு அதன் மதிப்பை இழந்தே போகும்

எனக்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள்
எனக்காக உயிரை கொடுக்க கூட ..
நானும் அவர்களுக்கு அப்படியே

ஏன்னா நட்பு உயிரை விட மேலானது

மகிழ்ச்சி

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: