முன் ஒரு காலத்தில் மாயதத்தன் என்ற ஒரு ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் தன் ஏழ்மையை எண்ணி தினமும் வருந்தினான்.
ஒரு நாள் மாய வாத்து ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அந்த வாத்து தினம் ஒரு தங்க முட்டையிடும் சக்தி வாய்ந்ததாக இருந்தது.
மாயதத்தன் அந்த தங்க முட்டைகளை விற்று பெரிய செல்வந்தனாக மாறினான். திடீரென ஒரு நாள் அவனுக்கு விசேசமான சிந்தனை வந்தது. இந்த வாத்து தினம் ஒரு தங்க முட்டையிட்டால் அதன் வயிற்றில் எத்தனை தங்க முட்டைகள் இருக்கும், அவையனைத்தையும் எடுத்து விற்றால் ஒரே நாளில் நாம் இன்னும் பெரிய செல்வந்தனாகி விடலாம் என்று எண்ணி அவன் வாத்தின் வயிற்றை கத்தியால் பிளந்து பார்த்தான். வயிற்றில் ஒரு முட்டை கூட இல்லை, மாயதத்தன் தன் பேராசையால் வாத்தையும் இழந்தான் தங்க முட்டைகளையும் இழந்து வருந்தினான்.
பேராசை பெரு நட்டம்.
Add comment