தமிழ்library
, துப்பறிவாளன், தமிழ்library

துப்பறிவாளன்

இன்ஸ்பெக்டராக பதவியேற்ற அரவிந்தனுக்கு முதல் வழக்கு. சென்ற வாரம் சிறந்த கவிதைக்கான தேசிய விருது பெற்ற கவிஞர் இன்று கொலை செய்ய பட்டுள்ளார்.
அரவிந்தன்: தீனா…அவர் வயித்துல குத்திருக்க வாள், அந்த அவார்டு வாள் தான….?கைரேகை நிபுணர்கள் வரலயா….என்னயா சொல்லுது உன் ஆறாவது அறிவு..
தீனா: அமீர் தான் சார் சந்தேகமே இல்ல ….பக்கத்துல கிடந்த பேப்பர்ல “அமீர் என்னை கொலை பண்ண….” அப்டீனு ஏதோ எழுதிருக்காரு…
அரவிந்தன்: வேற ?
தீனா:சத்தம் வெளிய கேட்க கூடாதுனு TV Volume அதிகமா வைச்சிருக்கான்..
அரவிந்தன்: கவிஞர் சுபாவம் எப்டி..?
தீனா: நல்ல மனுசன் சார்…இங்க பாருங்க 2 பேருக்கு coffee போட்டுருக்காரு..அவர் எதிர்பார்க்காத நேரத்தில குத்திருக்கான்…
அரவிந்தன் coffee சுவைத்தவாறு நல்லா தான் இருக்கு ..குடிச்சிருந்தா கொலை பண்ணிருக்க மாட்டான் என்றார்…
தீனா: அமிர கைது பண்ணியாச்சு சார்…நாயி பார்ல தண்ணியடிச்சுட்டு
இருந்தான்.

அந்நேரம் கைரேகை நிபுணர்கள் வந்தனர்.
அரவிந்தன்: தீனா நா அமிர விசாரிச்சுட்டு வாரேன்…நீங்க பார்த்துக்குங்க…
காவல் நிலையத்தில்…
அரவிந்தன்: ஏன் கொலை பண்ணுன,அவர் கூட என்ன பிரச்சன உனக்கு…
அமிர்: சார் சத்தியமா நா கொலை பண்ணல.
நீங்க நம்ப மாட்டீங்கனு தெரிஞ்சும் சொல்றேன்..அவர் வாங்குன பரிசு வாள் எனக்கு வரவேண்டியது…ஆமா அது என் கவிதை..நேத்து நியாயம் கேட்டு போனேன். வாள் வேணும்னா வைச்சிகோனு குடுத்தாரு… நா துர எறிஞ்சுட்டு, வழக்கு போட போரேன்னு வந்துட்டேன் சார்….
அரவிந்தன்: நேத்து மிரட்டி இன்னைக்கு கொன்றுக்க…தயாரா இரு….
(தீனாக்கு போன் பண்ணி coffee shop வர சொன்னான்)
அரவிந்: அமீர் தான் கொலைகாரனு நினைக்கிறாயா…
தீனா: ஏன் சார் புது சந்தேகம்
அரவிந்: வயித்துல குத்திருக்க வாளை கூட எடுக்காம பேப்பர்ல அமிர காட்டி குடுக்க வேண்டிய அவசியம் என்ன?
தீனா: சார்…..!
அரவிந்: 2 cup coffee லயும் சர்க்கரை போட்டுருக்கு..ஆனா கவிஞருக்கு வியாதினு எல்லாருக்கும் தெரியும்..
அதுமட்டுமல்ல கொலை பண்ணிட்டு casual a drink பண்ணுவானா எவனாச்சும்…
தீனா: சார் ஆனா கைரேகை report அமிர் ரேகை இருக்குனு சொல்லுது..
அரவிந்: இருக்கலாம்…நீ அமிர் பாருக்கு வந்த நேரம் பத்தி பார்ல வேலை பார்த்த பசங்கட்ட விசாரிக்க சொல்லு
தீனா: சொல்லிட்டேன் சார்…என்ன தான் நடந்திருக்கும் சொல்ல வாரீங்க..
அரவிந்: அமிரோட கவிதையை திருடி புகழ் வாங்கிட்டாரு மனுசன்..அமர் வந்து மிரட்டவும் பயந்து போய் தற்கொலை பத்தி யோசிருக்காரு….இறந்தாலும் புகழ் களங்க கூடாதுனு அவன கொலைகாரனா ஆக்கிடாரு …இனி அவன் உண்மையை சொன்னாலும் நம்ப மாட்டாங்க…simple…
தீனா: ஆனா கைரேகை மேட்டர் இடிக்கே சார்…
அரவிந்: தீனா, கைபிடிய பிடிக்காம கொலை பண்ண முடியுமா..I mean தற்கொலை…
தீனா: gloves போட்டுருக்கலாம்..இல்லனா கத்தியோட கைப்பிடி பக்கத்துல புடிச்சுருக்கலாம்
அரவிந்: gloves அங்க இல்ல..அவங்ககிட்ட வேறரேகை தடயம் இருக்கானு கேளுங்க…
தீனா: சரி சார்…
அரவிந்: கொலை சத்தம் வெளிய கேட்க கூடாதுனு தான tv Volume a அதிகமா வைப்பாங்க கொலை காரங்க பொதுவா…?
தீனா: புரியுது சார்…tvl remote லயும் கடைசி கைரேகை பார்க்க சொல்லனும் அதான….done
நீங்க tea சொல்லுங்க தல வெடிச்சுரும் பல இருக்கு…
Tea வரவும் போன் வரவும் சரியாய் இருந்தது…
தீனா போனில் பேசி கொண்டே அரவிந்தனிடம் “சார் வாள் அடிபகுதிலயும் tv remote லயும் ஒரே கைரேகை தான்….அது அமிரோடது இல்ல…
அரவிந்தன்: கவிஞரோட கைரேகைக்கு ஒத்து போகுதானு பார்க்க சொல்லுங்க…
தீனாவும் கூறிவிட்டு காத்திருந்தான்…பதிலை கேட்டு போனை வைத்தவாறு கூறினான்…
Sir genius sir நீங்க….!

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: