தமிழ்library
ஒட்டகத்தின் கதை

ஒட்டகத்தின் கதை

குட்டி ஒட்டகத்திற்கும் தாய் ஒட்டகத்திற்கும் இடையில் நடந்த உரையாடல் கற்பனையாக இங்கு தரப்படுகிறது. இந்த ஒட்டகத்தின் கதை சூழ்நிலையால் நீங்கள் கட்டப்பட்டவரா, நீங்கள் இருக்க வேண்டிய இடம் எது போன்ற கேள்விகளால் விழிப்புணர்வைத் தருகிறது.

 

“அம்மா, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?”
“நிச்சயமாக, கேள் மகனே.”

“ஏன் எங்களுக்கு இந்த கூன் முதுகு பெரிதாக வளைந்து இருக்கிறது.”
“நாம் பாலைவன மிருகங்கள். ஆகையால், இது எங்களுக்கு நீரைச் சேகரித்து வைப்பதற்கு உதவுகிறது. நீர் இல்லாவிட்டால் நாம் உயிர்வாழ முடியாது.”

“சரி, அப்படியென்றால் ஏன் எமது கால்கள் நீளமாகவும், பாதங்கள் வட்டமாகவும் இருக்கின்றன?”
“உண்மையிலேயே எனைய விலங்குகளைவிட நாம் பாலைவனத்தில் அதிகம் நடப்பதற்கும், ஆபத்து ஏற்படாமல் இருப்பதற்குமே அவ்வாறு இருக்கின்றன.”

“ஏன் எங்களுக்கு நீளமான இமைகள் இருக்கின்றன? சிலவேளை அவற்றைப் பார்ப்பதற்கு எனக்குச் சங்கடமாக இருக்கிறன.”
“அந்த கடினமான, நீளமான இமைகள் உனது கண்களை பாலைவனக் காற்று மற்றும் தூசுகளில் இருந்து பாதுகாப்பதற்குப் பிரயோசனமானது.”

“ஓ, அப்படியா! அப்படியென்றால் கூன் முதுகு பாலைவனத்தில் இருக்கும்போது தண்ணீர் சேமிக்கவும், கால்கள் பாலைவனத்தில் பாதுகாப்பாக நடக்கவும், அத்துடன் நீண்ட இமைகள் பாலைவன மணல் காற்றிலிருந்து பாதுகாக்கவுமே பயன்படுகிறது, அப்படித்தானே?”
“ஆம், மகனே.”

“இன்னும் ஒரேயொரு கேள்வி அம்மா…”
“கேள், மகனே.”

“அப்படியென்றால், எந்த மடையன் எங்களைக் கொண்டு இந்த மிருகக் காட்சிச்சாலைக்குள் அடைத்து வைத்தது?”

அறிவு, திறன், மனப்பாங்கு, அனுபவங்கள் எல்லாமே பொருத்தமான இடத்தில், சந்தர்ப்பத்தில்தான் உபயோகமானது. அவ்வாறெனில், நீங்கள் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள்? பொருத்தமான இடத்தில் இருக்கிறீர்களா? அல்லது அறிவு, திறன், மனப்பாங்கு, அனுபவங்கள் போன்றவற்றை பயன்படுத்த முடியாத, சூழ்நிலையால் அடைக்கப்பட்ட இடத்தில் இருக்கிறீர்களா?

 

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: