Latest stories

சிறகை விரித்தப் பறவை

பேருந்து,   அண்ணாசாலை வழியே சென்று  கொண்டிருந்தது. சாலையில் சில பள்ளி மாணவிகள் சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் செல்கின்றனர். ஒரு வயதான தாத்தா பேரனை பள்ளிக்கு அழைத்துக்கொண்டு போகிறார். இளவயது தாய் ஒருவர் தோளில் ஒரு பையுடன், தன்  குழந்தையை...

கூடா நட்பு

ஒரு ஊருக்கு வெளியே தூர்ந்த குளம் ஒன்று இருந்தது. அந்தக் குளத்தில் சர்ப்பம் ஒன்று வசித்து வந்தது. குளத்தில் பெயரளவிற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. குளத்தைச் சீந்துவார் யாருமிலர். அந்த குளத்திலிருந்து கூப்பிடும் தூரத்தில் தடாகம் ஒன்று இருந்தது...

அமுதசுரபி

ஒருஊரின் நடுவே இரண்டு நாவல்மரங்கள் இருந்தன. ஒன்று கனிதரும் மரமாக (கனிநாவல்) இருந்தது. மற்றொன்று கனிதராத மரமாக (மொட்டைநாவல்) இருந்தது. கனிநாவலின் பழங்களை ஊர்மக்கள் அனைவரும் பெற்று உண்டுமகிழ்ந்தார்கள். அம்மரமும் அனைவருக்கும் உண்ணக்கனிகள் தருகிறோம்...

வானம்பாடி

வானம்பாடிப்பறவை ஒன்று வானில் பறந்துசென்று கொண்டிருந்தது. அப்போது அது, ஒரு சிறுமி மிகுந்த வருத்தத்துடன் தன்வீட்டுக் கொல்லையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தது. அந்தச்சிறுமியின் பெயர் மாயா. நான்காம் வகுப்புப் படிக்கிறாள். வானம்பாடிக்குக் குழந்தைகள்...

கொல்லும் சினம்

மற்றவர்களைப் போன்று கிடையாது. ராமுவின் பாகன் அதனை நன்றாகவே கவனித்துக் கொண்டான். ஒருசிலரைப் போன்று பாகன் ராமுவை இரவல்பெற அழைத்துச் செல்லமாட்டான். கோவில் விழாக்கள், திருமண வைபவங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு மட்டுமே கூட்டிச்செல்வான். அதில் கிடைக்கும்...

திருப்பம்

“மாதவா,  மாதவா என்று அழைத்துக் கொண்டே, தன் மீசையை நீவிவிட்டபடி அன்றைய தினசரியை புரட்டிக் கொண்டிருந்தார்  குமாரவேலன் .” “இதோ வந்துட்டேன் சார்”, என்று கூறிக்கொண்டே வழக்கு கோப்புகளை அடுக்கி எடுத்துக் கொண்டு ஓடினான் எழுத்தர் மாதவன். “என்ன மாதவா...

காட்டுச்செடியின் அனுபவம்

ஒருகாட்டில் செடி ஒன்று இருந்தது. அது தினமும் அழகிய மலர்களைப் பூக்கச் செய்தது. இருந்தும் என்ன பயன்? யாரும் அந்தச்செடியின் பெரிய வண்ணப்பூக்களின் அழகை நின்று இரசித்ததில்லை. அதன் நறுமணத்தை நுகர்ந்து கிளர்ச்சி கொண்டதுமில்லை. தினமும் காலையில் பூக்க...

போட்டிபோடு

தலைமை ஆசிரியரிடமிருந்து சுற்றறிக்கை வந்திருந்தது. இந்த ஆண்டும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நமது பள்ளியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பெறுகிறது; ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம், வெற்றி பெறுவோர்க்குப் பரிசுகள் ஆண்டுவிழாவில் வழங்கப்படும்; பெயர்தர நாளை...

மகனும் அப்பாவும்

குமாரின் குலத்தொழில் விவசாயம். ஆனால் அவனுக்கு விருப்பம், வேறு எங்காவது சென்று வேலைபார்க்க வேண்டும் என்பது. ஒரிசாவில் வேலை கிடைத்தது, அங்கிருந்து குஜராத். பெரிய அலுவலக வேலையொன்றுமில்லை, பட்டறை வேலைதான். சென்ற இடத்தில் மதாங்கியின் அழகில் மனதை...

வள்ளி என்றொரு நாயகி

மன்னர் விக்கிரமங்கலத்திற்குக் குழந்தை பாக்கியம் கிடையாது. இதனால் மன்னரும் ராணியாரும் பெரிதும் துயருற்றனர். இருவருக்கும் பெண்குழந்தைகள் என்றால் கொள்ளைப்பிரியம், ஒரு பெண்குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க இருவரும் ஆசைப்பட்டனர். மன்னர் தனது விருப்பத்தை...

வைரம் மின்னும்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறை அது. ஒரு நாள் அந்த மாணவர்களின் வகுப்பாசிரியர் வகுப்பறைக்கு வந்தார். அவர் அந்த வகுப்பின் அனைத்து  மாணவர்களுக்கும் ஆளுக்கொரு காகிதப் பொட்டலம் தந்தார். அதைப் பிரித்துப் பார்க்கச் சொன்னார். மாணவர்கள் பிரித்துப்...

விமர்சனம்

ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணி. நண்பர் ராஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுத்தால் ‘விளையாட வா’ என்றார். அவசர அவசரமாகக் கிளம்பி மைதானத்திற்கு ஓடினேன். 3 மணி நேரம் நன்றாக விளையாடிவிட்டு, களைப்போடு வீட்டிற்கு வந்தேன். மனைவி தொலைக்காட்சியில் திரை...

யாருடைய குரல் சிறந்த குரல்?

வானம் மேகமூட்டமாய் இருந்தது, மழைவரும் போலிருந்தது. இக்காட்சி கண்ட கானகமயில் ஒன்று மிக்கமகிழ்ச்சி கொண்டது. அது மொட்டைப்பாறை ஒன்றின்மீது ஏறிநின்று தோகைகளைவிரித்து ஆட ஆரம்பித்தது. அதீதஉற்சாகத்தில் அது அகவவும் செய்தது. அருகே இருந்த மரத்தில் குயில்ஒன்று...

நோன்பு

சுபைதா மன்ஸிலில் நடந்தவற்றைத்தான் ஹாலித் சொல்லிக் கொண்டிருந்தான். இன்றுபோல பலமுறை அவற்றைச் சொல்லி இருக்கிறான். சுமார் இருபதாண்டு காலப் பேச்சுகள் இவை. ஹாலித் சொல்வது பழைய செய்திகளாகிவிட்டன முபாரக்கிற்கு, என்றாலும் காதுகொடுத்து அமைதியாகக் கேட்பான்...

கடவுளுக்ககே சாமி

பிரியா காலையில் ஜன்னலை திறந்தாள். ஒரு கப் தண்ணீரை பருகியபடி ஒரு நிமிடம் தன்அ டுப்பங்கரை ஜன்னல் பக்கமாய் சாய்ந்த பக்கத்துக்கு வீட்டு மா மரத்தின் இலைகைளையும் அது தந்த குளிர் தீண்டலையும் ரசித்தாள். கடகடவென சமையல் வேலைகளை ஆரம்பித்தாள். நாலு வயது...

உண்மை

ரவி, மணி இருவரும் நண்பர்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இருவரும் படுசுட்டி பையன்கள். ரவியின் மாமா பட்டணத்தில் வேலை செய்கிறார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் ஊருக்கு வருவதாக சொல்லியிருந்தார். வரும்போது பரிசுகள் வாங்கி வருவதாக கூறினார்...

நாங்களும் நல்லவர்களே!

 நரிகள் என்றாலே ஏமாற்றுப் பேர்வழிகள் என்று பெயர் ஏற்பட்டிருந்தது. அதனால் அந்தக் காட்டுக்குள் நரிகளைக் கண்டாலே எல்லா விலங்குகளும் கடித்து விரட்டின. எனவே நரிகள் அந்தக் காட்டை காலி செய்து கொண்டு அடுத்த காட்டிற்குச் சென்றுவிட்டன. இரண்டு...

இனிப்பா? உப்பா?

ஒரு பக்கம் உப்பு மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் சக்கரை மூட்டைகள் இரண்டும் ஈரக்கசிவோடு இருந்தன. பெரியநாயகம் தலையில் வைத்துக் கொண்டு கவலையோடு இருந்தார். காரணமா ஈரக்கசிவான மூட்டைகளை எப்படி விற்பதென்றுதான். இதைப்பார்த்த அவர்...

கர்வம்

அடர்ந்த காட்டுப்பகுதியில் குதிரை புல் மேய்ந்து கொண்டிருந்தது. அங்குள்ள பொந்து ஒன்றில் வசித்த எலியைக் கண்டதும், இரண்டும் பேசிப் பழகின. சிறந்த நண்பர்கள் ஆனார்கள். இருந்தாலும் எலி தற்பெருமை அடித்துக் கொள்ளும். நான் மிகவும் வலிமையானவன். மண்ணையே...

விதைப்பு

 பூதலிங்கம் பெரும் பணக்காரர். நூற்றி எட்டு வேலி நிலமும், 10 கிரவுண்டுக்கு வீடும் இருந்தது. மந்தை மந்தையாக ஆடுகளும், மாடுகளும் வளர்ந்தன. கஜானா அறையில் பொன்னும், பொருளும் நிரம்பி கிடந்தது. பத்துவிரல் மோதிரம், பகட்டான ஜிப்பா, பட்டு...

தலைவன்

 மலையும், காடுகளும் நிறைந்த, நீர்வளமும் நில வளமும் கொண்ட, அந்த நாட்டை கொங்கன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அனுக்கு வீரத்திலும் தீரத்திலும், புத்திகூர்மையிலும், சிறந்த வீரத்தளபதி ஒருவர் இருந்தார். அவர் பெயர் அறிவுடையநம்பி. அறிவுடையநம்பியின்...

புத்திசாலி ஆட்டுக்குட்டி

அந்த அடர்ந்த காட்டில் நரி ஓநாய் சிங்கம் கரடி என ஏராளமான மிருகங்கள் வாழ்ந்து வந்தன. எல்லா மிருகங்களும் நன்கு கொழுத்த உடலோடு நடமாடிக் கொண்டிருந்தன. அதற்கு காரணமும் உண்டு. அந்தக் காட்டை ஓட்டியுள்ள சிறுகிராமத்தில் முத்துசாமி என்ற ஏழை வாழ்ந்து வந்தான்...

பறக்க ஆசைப்பட்ட செடியன்

ஒரு கிராமத்துல செடியன்னு ஒரு பையன் இருந்தான். அவன் செடி உயரம்தான் வளர்ந்திருந்தான். அதனால் அவனுக்கு அந்தப் பெயர். செடியனுக்கு பறவைகள் போல பறக்க ஆசை. ‘ஆனா நாம மற்றவர்கள் மாதிரி சராசரி உயரம் இல்லையே. நம்மால பறக்க முடியுமான்னு’ ஒரு சந்தேகம்...

மகிழ்ச்சிக்கு வழி!

இந்த உலகில் நாம் மட்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லாத விஷயம். அக்கம் பக்கத்தில் இருக்கும் மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். புற உலகில் நமது வாழ்க்கைப் பிறரைச்...

நான்கு மனைவிகள்

அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால்...

மடப்பயலே..

கருங்குழி என்னும் கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தான். ஒருநாள் அவன் தன் கழுதையை கயிற்றினால் கட்டி வீட்டுக்கு இழுத்து வந்து கொண்டிருந்தான். வரும் வழியில், ஒரு திருடன் ஒருவன் அவனை பார்த்தான். அந்த விவசாயி ஒரு நல்ல ஏமாளி என்பதை தெரிந்து கொண்டான்...

கொலை

கடந்த 28 ஆண்டுகளில் இன்றுதான் முதன்முறையாக என் இதய துடிப்பை இவ்வளவு சத்தமாக கேட்கிறேன். என் உள்ளங்கை முழுவதும் சூடான இரத்தத்தின் பிசுபிசுப்பு. என் சட்டையிலும் சில இரத்த துளிகள் தெறித்திருப்பது நிலா வெளுச்சதில் அப்பட்டமாக தெரிகிறது .என்னை கடந்து...

புது வீடு

சிறிய நகரத்தில் இருந்து சற்று வெளிய தள்ளி அமைந்திருந்தது அந்த புறநகர் பகுதி. அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்திருந்த வீடுகளின் அளவும், அமைப்பும், அது நடுத்தர மக்களுக்கான வளர்ந்துவரும் குடியிருப்பு பகுதி என்பதை உணர்த்தியது . அனேகமாக அது தான் அந்த...

மரியாதை ராமன் மோதிரம்

ராமனும் சோமனும் நண்பர்கள். ஒரு நாள் ராமன் சோமனிடம் வந்தான். “சோமா, நான் ஒரு கல்யாணத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது. உன்னுடைய தங்க மோதிரத்தை ஒரு நாள் இரவல் கொடுத்தால் கல்யாணத்திற்குப் போய் வந்ததும் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்”...

Recent Posts

Archives

Categories